தமிழ்நாடு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மிஷன் வத்சாலயா திட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையத்திற்கு 1 வழக்குப் பணியாளர் பணியிடம் முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது.
தென்காசி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு காலியிட விவரங்கள்
வரிசை எண்
பதவியின் பெயர்
காலியிடம்
1.
வழக்குப் பணியாளர் (Case Worker)
1
மொத்தம்
1
தென்காசி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு கல்வித் தகுதி விவரங்கள்:
வரிசை எண்
பதவியின் பெயர்
கல்வித் தகுதி
1.
வழக்குப் பணியாளர்
அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தென்காசி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு வயது வரம்பு விவரங்கள்
அதிகபட்ச வயது: 42 ஆண்டுகள்.
தென்காசி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சம்பள விவரங்கள்
வரிசை எண்
பதவியின் பெயர்
சம்பளம் (மாதத்திற்கு)
1.
வழக்குப் பணியாளர் (Case Worker)
₹18,000/- (தொகுப்பூதியம்)
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முகவரி:
தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்குரிய விண்ணப்பப் படிவத்தை தென்காசி மாவட்ட இணையதளத்தில் https://tenkasi.nic.in பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தென்காசி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்களுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, எண்.14, பெருமாள் கோவில் தெரு (SPA Hall), செவன்த்டே பள்ளி அருகில், தென்காசி 627 811.