WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

தமிழ்நாடு எங்கிருந்தும்   எந்நேரத்திலும் திட்டம் – ஆன்லைனில் பட்டா பரிமாற்றத்திற்கு உதவும்!!!

Tamilnadu Engirundhum Ennerathilum Scheme  : இந்தியாவில் வசிக்கும் மக்கள் தங்கள் அரசு அமைக்கும் திட்டத்திற்கு நேரில் ஆஜராக வேண்டிய தேவையை நீக்குவதற்காக சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் தமிழக மக்களுக்காக “எங்கிருந்தும் எந்நேரத்திலும் திட்டம்” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது. இது அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் அவர்களுக்கு  இருக்கும் மன அழுத்தத்தையும்  குறைக்கிறது. வருவாய்த் துறையின் “Anywhere Anytime Online Patta transfer Scheme” நில ஆவணங்களை மாற்றுவதற்கு தனிநபர்கள் பொதுவான சேவை மையங்கள் அல்லது துணைப் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தேவையை இத்திட்டம் நீக்குகிறது.

Tamilnadu Engirundhum Ennerathilum Scheme 

முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீப காலமாக மாநிலங்களின் நலன் கருதி தமிழக அரசுக்கு பயனுள்ளதாக இருக்கும் புதிய திட்டங்களை துவக்கி வைத்தார். செப்டம்பர் 23, 2022 அன்று மாநிலத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரே நோக்கத்துடன் “Anywhere Anytime Online Patta transfer” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆன்லைனில் பட்டா பரிமாற்றம் அதாவது நில ஆவணங்கள் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த ஐடியாவின் பெயர்  “எங்கிருந்தும் எந்நேரத்திலும்” என்று தீர்மானிக்கப்பட்டது.

நில ஆவணங்களை மாற்றுவதற்கு தனி நபர்கள் பொது சேவை மையங்களுக்கு அல்லது துணை பதிவாளர் அலுவலகத்துக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நில ஆவணங்களை மாற்றுவதற்கு பதிவு செய்ய விரும்பும் குடிமக்கள் இணைய தளம் அல்லது ஆன்லைன் தளத்திற்கு சென்று பதிவு செய்யலாம். https://www.tamilnilam.gov.in./ என்ற இணையதளத்தை பார்க்கவும். இப்போது ஆன்லைனில் பணம் செலுத்தப்படலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை முடிக்க வங்கிக்கு இனி பயணம் செய்ய வேண்டியதில்லை. பதிவு நடைமுறை முடிந்து நில பரிமாற்றம் முடிவடைந்த பிறகு புதிய நில ஆவணங்களை அதே இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் (Download) செய்யலாம்.

முதலமைச்சர் 2014 மற்றும் 2017 ஆண்டுகளுக்கு இடையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நகரப்புற நில வரைபடங்களை பெறுவதற்கு அனுமதிக்கும் தளத்தை https://eservices.tn.gov.in/eservicesnew/home.html உருவாக்கினார். “தமிழ் நிலம்” என்ற Software குறிப்பிட்ட நகரங்கள் மற்றும் தொகுதிகளை வரைபடமாக பயன்படுத்தப்பட்டது. மேலும் இதன் விளைவாக வரும் வரைபடங்கள் அனுமதி மற்றும் வங்கி நிதியை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

Tamilnadu Engirundhum Ennerathilum Scheme – Overview

திட்டத்தின் பெயர்Engirundhum Ennerathilum Scheme
மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதுChief Minister Of Tamilnadu – M.K.Stalin
திட்டத்தின் தொடக்க தேதிSeptember 23rd , 2022
ஸ்டேட்TamilNadu
குறிக்கோள்Citizens of Tamilnadu State
நன்மைகள்Easy download and features available online
பயன்பாட்டு முறைOnline
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.tamilnilam.tn.gov.in/citizen

Tamilnadu Engirundhum Ennerathilum Scheme- Objectives 

தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் தங்கள் சொத்து ஆவணங்களுடன் தொடர்புடைய பல பணிகளை இத்திட்டத்தின் மூலம் செய்யலாம். இதுவே “எங்கிருந்தும் எந்நேரத்திலும்” திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். மாநில அரசு இதை செய்வதன் மூலம் மாநிலத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் எளிதாகவும் உதவியாகவும் இத்திட்டம் செயல்படுகிறது.

Tamilnadu Engirundhum Ennerathilum Scheme  – Benefits

  • நில ஆவணங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து சிக்கல்களையும்  இனிமேல் ஆன்லைன் போர்டல் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.
  • நில ஆவணங்களை மாற்ற துணை பதிவாளர் அலுவலகத்துக்கோ அல்லது பொது சேவை மையத்துக்கோ இனி மக்கள் செல்ல வேண்டியதில்லை. 
  • இத்திட்டத்தின் முக்கிய நன்மை என்னவென்றால் வாடிக்கையாளர்கள் இனி ஆன்லைனில் பணம் செலுத்தலாம், வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை.
  • கட்டணங்கள் portalலில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அது தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் கையாளப்படும்.
  • நில ஆவணங்கள் வெற்றிகரமாக மாற்றப்பட்ட பிறகு சர்டிபிகேட் மற்றும் தேவையான ஆவணங்கள் போர்டலில் இருந்தே பதிவிறக்கம் செய்யப்படும்.
  • அதாவது ஈசியாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • நகரப்புற நில வரைபடங்களை ஆன்லைன் ஹோட்டலில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.
  • எந்த ஒரு இடை தரகர்களின் பங்களிப்பும் இல்லாமல் அனைத்து ஆவணங்களையும் செய்வது இப்போது சுலபமாகும்.
  • இத்திட்டத்தின் முக்கிய நன்மை என்னவென்றால் கூடுதல் கட்டணம் அல்லது மோசடி போன்ற எந்த நிகழ்வுகளும் நடக்காது. இந்த திட்டத்தின் முழு வெளிப்படை தன்மை புலனாகிறது.

You can also read Pudhumai Penn Scheme 2023

Tamilnadu Engirundhum Ennerathilum Scheme – Eligibility

  • விண்ணப்பதாரர் தமிழ்நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • இதை பயன்படுத்த வேண்டுமானால் ஆன்லைனில் விண்ணப்பதாரர்கள் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
  • அக்கவுண்ட் கிரியேட் ஆன பின்பு தான் எல்லா வகையான நன்மைகளையும் இத்திட்டத்தின் மூலம் அனுபவிக்க முடியும். 
  • ரெஜிஸ்டரி மாற்ற விரும்பும் எந்த ஒரு பையனரும் இணையதளத்தை பயன்படுத்தலாம்.

Tamilnadu Engirundhum Ennerathilum Scheme – Needed Documents

  • Aadhar Card
  • Address Proof
  • Sale Deed
  • Settlement Deed
  • Partition Deed
  • Gift Deed
  • Exchange Deed
  • Release Deed
  • Mobile Number
  • Email ID

Tamilnadu Engirundhum Ennerathilum Scheme – Registration Process

  •  Visit the Official Website https://www.tamilnilam.gov.in./ of the Scheme.
  •  Click the TamilNilam Site Option.
  •  Registration Page will be displayed, enter your details and click the   

            register option button.

  • Now, Successful registration will be done by these proceedings.

Tamilnadu Engirundhum Ennerathilum Scheme FAQs

1.தமிழ்நாடு எங்கும் “எங்கிருந்தும் எந்நேரத்திலும் திட்டம்” எப்போது தொடங்கப்பட்டது?

 23 செப்டம்பர் 2022 அன்று

2. தமிழ் நிலம்  போர்டல் பதிவு செய்வது எப்படி ?

அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மொபைல் நம்பர் மற்றும் இமெயில் ஐடியை பதிவு செய்த பிறகு ரெஜிஸ்டர் பட்டனை கிளிக் செய்யவும்.

3.தமிழ்நாடு  “எங்கிருந்தும் எந்நேரத்திலும் திட்டத்தின்” நோக்கம்?  

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு எங்கும் ஆன்லைனில் பட்டா பரிமாற்றத்தை எளிதாக செய்ய முடியும்.

Leave a Comment

Tamilnadu Government Schemes